பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி இல்லாத குழந்தைகள் இறக்கை இல்லாத பறவைகள் போன்றவர்கள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-''கல்வி இல்லாத குழந்தைகள் இறக்கை இல்லாத பறவைகள்,'' என்று ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவின்குமார் பேசினார்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர்தின விழா மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற (நல்லாசிரியர்விருது) ஆசிரியர்கள் ஆரோக்கிய பன்னீர்செல்வம், ரவி, முத்துக்குமார், சந்தானகிருஷ்ணன்,

ராமநாதபுரம்-''கல்வி இல்லாத குழந்தைகள் இறக்கை இல்லாத பறவைகள்,'' என்று ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவின்குமார் பேசினார்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர்தின விழா மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற (நல்லாசிரியர்விருது) ஆசிரியர்கள் ஆரோக்கிய பன்னீர்செல்வம், ரவி, முத்துக்குமார், சந்தானகிருஷ்ணன், ஆல்பர்ட் மனோகரன், நிர்மலாதேவி, பரமேஸ்வரன், டார்த்தி கரோலின், செங்கோல் திரவியம், முனீஸ்வரி ஆகியோருக்கு விருது வழங்கும் விழா நடந்தது.கூடுதல் கலெக்டர் பிரவின்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூடுதல் கலெக்டர் பேசியதாவது:கர்நாடகாவில் எனது தாய், தந்தை இருவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். அவர்களிடம் பாடம் கற்றவன் நான். உலகில் ஓய்வு இல்லாத பணி என்றால் அது கற்பித்தல் பணி மட்டும் தான் என்று எனது தாய் சொல்வார்.கல்வி இல்லாத குழந்தைகள் இறக்கை இல்லாத பறவை போன்றவர்கள். வேறுபட்ட சமூக, பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களை கையாளும் ஆசிரியர்கள் திறமை மிக்கவர்கள்.நான் ஐ.ஏ.எஸ்.,ஆகி இருக்காவிட்டால் ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராகத்தான் பணியாற்றி இருப்பேன். ஒரு டாக்டர்தவறு செயதால் ஒரு நோயாளியின் உயிர்தான் போகும். ஒரு இன்ஜினியர்கட்டிய கட்டடத்தில் தவறு நடந்தால் அந்த கட்டடம்இடிந்து சில மக்கள் இறப்பார்கள்.அதுவே ஒரு பள்ளியில் ஆசிரியர் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும். ஆசிரியர்களான நீங்கள் மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். மாணவர்களின்எதிர்காலம் ஆசிரியர்களான உங்கள் கையில் தான் உள்ளது, என்றார்.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், அரசுதேர்வுகள் உதவி இயக்குனர்கல்பனாத் ராய் உட்பட பலர் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X