உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமரா ராமேஸ்வரத்தில் பாதுகாப்பில் சிக்கல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்,--ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராவால், பக்தர்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட, தென் மாநில பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் வாகனங்களை அக்னி தீர்த்த கடற்கரையில் நிறுத்தி நீராடும்போது, திருடர்கள் வாகன கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள், கடற்கரையில் வைத்த பண

ராமேஸ்வரம்,--ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராவால், பக்தர்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட, தென் மாநில பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் வாகனங்களை அக்னி தீர்த்த கடற்கரையில் நிறுத்தி நீராடும்போது, திருடர்கள் வாகன கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள், கடற்கரையில் வைத்த பண பேக்கை திருடி செல்கின்றனர்.இத்திருட்டை தடுக்க அக்னி தீர்த்த கடற்கரை,நடைபாதையில் 10க்கு மேலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.ஆனால் தற்போது சில கேமராக்கள் பழுதாகியும்,உடைந்து கம்பத்தில் தொங்கி கிடப்பதால் திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிரமம் உள்ளது.இதனால் பக்தர்கள், கோயில் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே உடைந்தும், பழுதாகி கிடக்கும் சிசிடிவி கேமிராவை சரிசெய்து பாதுகாப்பை தீவிரப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X