ராமநாதபுரத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் வ.உ.சி., பிறந்த நாள் விழா

Added : செப் 06, 2021
Share
ராமநாதபுரம்--கப்பலோட்டிய தமிழன்வ.உ.சி., 150வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகநேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் தேசியக்கொடி வைக்கப்பட்டிருந்தது.அரசு சார்பில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்மலர் துாவி மரியாதை செய்தார். மாவட்ட ஊராட்சி

ராமநாதபுரம்--கப்பலோட்டிய தமிழன்வ.உ.சி., 150வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகநேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் தேசியக்கொடி வைக்கப்பட்டிருந்தது.அரசு சார்பில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்மலர் துாவி மரியாதை செய்தார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.ராமநாதபுரம் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வன்னி பிரபு தலைமையில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் அஜித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் இந்திராணி பங்கேற்று மரியாதை செய்தார்.* ராமேஸ்வரத்தில் வ.உ.சி., பேரவை சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின் 150 ஏழை குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர்.இதில் ராமகிருஷ்ணபுரம் விவேகானந்து குடில் சுவாமி பிரணவானந்தா, வ.உ.சி., பேரவை நிர்வாகிகள் என். வேடராஜன், முத்துக்குமார், சேதுராமன், இளைஞரணி நிர்வாகிகள் வினோத், சரவணன், ராமதாஸ், முனியாண்டி பலர் பங்கேற்றனர்.* காட்டு பரமக்குடியில்அனைத்து வெள்ளாளர் மகா சபை கார்த்திகேயன், மதுரை ஆதினம் ஹரி ஹரஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், முருகேசன்,முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், போகலுார் ஒன்றிய பொருளாளர், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முத்தையா, ஜெ.பேரவை நகர செயலாளர் வடமலையான், பார்த்திபனுார் வினோத், ஊராட்சி மன்றத் தலைவர் நாகநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெய்சங்கர்,பா.ஜ.க., சார்பில் மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் பாலகணபதி, மண்டல தலைவர் சண்முகராஜ், காங்., சார்பில்மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். -----* சாயல்குடியில் பிள்ளைமார் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் கல்யாண முருகன், பொருளாளர் மாடசாமி உட்பட அனைத்து சமுதாய பொதுமக்களும் பங்கேற்றனர்.சாயல்குடி முகையூர் ரோடு சந்திப்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. 100 குழந்தைகளுக்கு இனிப்பு, ஆடைகள் வழங்கப்பட்டது. த.மு.மு.க., நகர் தலைவர் ஜாபர் அலி தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். நகர் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் செய்துஇருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X