பொது செய்தி

தமிழ்நாடு

கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை

Added : செப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--கிராம கோயில் பூஜாரிகளுக்கு அரசு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என ஹிந்து கோயில்கள் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி பூஜாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியிருப்பது:ஹிந்து சமய அறநிலையதுறைக்கு உட்பட்ட ஒரு கால பூஜை திட்ட கோயில் பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கவும், திருத்தணி, சமயபுரம் உள்ளிட்ட பெரிய கோயில்களில் அன்னதானம்

ராமநாதபுரம்--கிராம கோயில் பூஜாரிகளுக்கு அரசு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என ஹிந்து கோயில்கள் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி பூஜாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியிருப்பது:ஹிந்து சமய அறநிலையதுறைக்கு உட்பட்ட ஒரு கால பூஜை திட்ட கோயில் பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கவும், திருத்தணி, சமயபுரம் உள்ளிட்ட பெரிய கோயில்களில் அன்னதானம் வழங்கவும், இலவச முடி காணிக்கை திட்டம் அறிவித்த தமிழகமுதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.அதே நேரம் கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கிராம கோயிலுக்கு இலவச மின்சாரம், பூஜாரிகளுக்கு அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X