மழையால் பெரிய கண்மாய் துார்வாரும் பணி பாதிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், தொடர் மழையால், பெரிய கண்மாய் துார்வாரும் பணி பாதிப்படைந்துள்ளது.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் துார்வாரி, மடைகள் சீரமைப்பு செய்ய அரசு ரூ 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய கண்மாயின் கரைகள் சீரமைப்பு, மடைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், தொடர் மழையால், பெரிய கண்மாய் துார்வாரும் பணி பாதிப்படைந்துள்ளது.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் துார்வாரி, மடைகள் சீரமைப்பு செய்ய அரசு ரூ 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய கண்மாயின் கரைகள் சீரமைப்பு, மடைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. பெரிய கண்மாயில் சேதமடைந்த மடைகள் உடைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழையால் துார்வாரும் பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே பெரிய கண்மாயில் மடைகள் சீரமைப்பில், அதிகாரிகள் கவனம் செலுத்தி, விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X