பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சிதம்பரம் பிறந்தநாள் கண்காட்சி

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்புத்துார்--சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். விழாவிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார்.அமைச்சர் பேசியதாவது, போராட்ட காலத்தில் மன உறுதி மிக்கவராக வ.உ.சிதம்பரம் பிள்ளை இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர்களுக்கு சிம்ம

திருப்புத்துார்--சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். விழாவிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார்.அமைச்சர் பேசியதாவது, போராட்ட காலத்தில் மன உறுதி மிக்கவராக வ.உ.சிதம்பரம் பிள்ளை இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். பள்ளிகளில் அவரது வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளோம் என்றார். சோழிய வேளாளர் உறவின் முறை தலைவர் அண்ணாமலை வாழ்த்துரை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் தென்னவன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், ஆ.பி.சீ.அ., பி.எட்., கல்லுாரி தாளாளர் ராமேஸ்வரன், இன்பா அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் இளஞ்செழியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, முன்னாள் துணைத் தலைவர் கார்த்திகேயன்,சேகர் பங்கேற்றனர். தாசில்தார் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் படத்திற்கு அமைச்சர், கலெக்டர், டி.ஆர்.ஓ., மணிவண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மானாமதுரை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வ.உ., சிதம்பரனார் பிறந்த நாளை கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X