பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கையில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், சங்குமுத்தையா முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கணேசன், திருக்களாப்பட்டி அரசு பள்ளி தலைமை

சிவகங்கை-சிவகங்கையில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், சங்குமுத்தையா முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கணேசன், திருக்களாப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பி.வடிவேல், இளையான்குடி அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் என்.இ.என்., இப்ராகிம்சா, திருப்புவனம் அரசு மகளிர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கே.வேங்கடமோகன், கருப்பூர் நடுநிலை பள்ளி ஆசிரியர் ஆர்.ஸ்டீபன், காவதுகுடி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.வைரம்மை, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை டி.சாவித்திரி, கண்டனுார் சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஏ.அன்பழகன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியை ஜெ.எஸ்.புனிதா ஆகியோருக்கு அமைச்சர் பெரியகருப்பன் நல்லாசிரியர் விருது மற்றும் ரூ.10,000 பரிசு தொகை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X