தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு| Dinamalar

தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : செப் 06, 2021
Share
வால்பாறை:வால்பாறையில் பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும், சோலையாறு அணை இரண்டு முறை நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு
 தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை:வால்பாறையில் பெய்த தென்மேற்குப் பருவமழையினால், பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும், சோலையாறு அணை இரண்டு முறை நிரம்பியது. இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.21 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,194 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து, பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 1,106 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.பரம்பிக்குளம் அணையில், 71.58 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X