பொது செய்தி

தமிழ்நாடு

பூலாங்குறிச்சி களப்பிரர் கல்வெட்டு பாதுகாப்பு சின்னமாக அறிவிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை-திருப்புத்துார் அருகே பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர். இதை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசு அறிவிக்க உள்ளதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றனர்.இங்குள்ள களப்பிரர் கால காலத்து 3 தமிழ் கல்வெட்டுக்கைள ஆசிரியர் கேஆர்., ராஜேந்திரன் கண்டறிந்துள்ளார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் செதுக்கி

சிவகங்கை-திருப்புத்துார் அருகே பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர். இதை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசு அறிவிக்க உள்ளதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றனர்.இங்குள்ள களப்பிரர் கால காலத்து 3 தமிழ் கல்வெட்டுக்கைள ஆசிரியர் கேஆர்., ராஜேந்திரன் கண்டறிந்துள்ளார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் செதுக்கி அதனை சமப்படுத்தாமல் கல்வெட்டுகள் பொறித்துள்ளனர்.அசோகர் காலத்து பாறை கல்வெட்டுகளுக்கு இணையான களப்பிரர் ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டினை பாதுகாக்க வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இக்கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசிடம் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, தொல்லியல் கழக நிறுவனர் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை ஏற்று அமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ளதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X