பொது செய்தி

தமிழ்நாடு

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்: கொரோனா சேவையில் அசத்தல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த மூன்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.ஆசிரியர் தினத்தையொட்டி, ஆண்டுதோறும், பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, உடுமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், நல்லாசிரியர் விருதுக்கு தகுதி
 மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்: கொரோனா சேவையில் அசத்தல்

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த மூன்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.ஆசிரியர் தினத்தையொட்டி, ஆண்டுதோறும், பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, உடுமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், நல்லாசிரியர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.அவர்களில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சின்னராசு, 'தினமலர்' நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்.கடந்த, 30 ஆண்டு கால பணியின் வாயிலாக, மாணவ, மாணவியருக்கு இயல், இசை, நாடகம் பயிற்சி அளிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அரசு சார்ந்த கலை, இலக்கிய விழாக்கள் மற்றும் போட்டி நடத்துவதற்கு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.தமிழ் ஆசிரியர்கள் கருத்தாளராகவும், கொரோனா நோயாளிகளுக்கு உளவியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.ராகல்பாவி ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியரான கண்ணபிரான், 13 ஆண்டு பணியின் வாயிலாக, பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருந்து, கல்வித் தொலைக்காட்சியில், 350க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகளை ஒளிப்பரப்பு செய்ய வழிவகை செய்துள்ளார்.இரு ஆசிரியர் மட்டுமே உள்ள ராகல்பாவி பள்ளியில், முதன்முறையாக ஐ.டி.டி., வகுப்பறை வாயிலாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் 'ஆப்' வழியாக கற்பித்தல் செயல்பாடுகளை துவக்கி உள்ளார்.கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக, மாணவர்களின் அறிவியல் சார்ந்த திறன்களை வெளிக் கொணர பேருதவியாக இருந்து வருகிறார்.பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் வசந்தியும், நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். கடந்த, 17 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி செயல்படாத நிலையில், மாணவ, மாணவியரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறார்.புதுமையான கருத்துகளை எடுத்துரைப்பதுடன், அதிகப்படியான பாட வீடியோ தயாரிப்புகளை 'யூ டியூப்' வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளார்.பிளாஸ்டிக் விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடவு என சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பணியில் தீவிரம் காட்டி வருகிறார். பள்ளியில் திருக்குறள் மன்றம் துவக்கியும், 'நல் மாணவர் விருது' சான்று வழங்கியும் மாணவர்களை கற்றலில் மேம்படுத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X