பொது செய்தி

தமிழ்நாடு

திறன் வளர்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : படித்த இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார் தொழில்திறன் பயிற்சி, கட்டுமானம் குழாய் பொருத்துனர் மற்றும் ஆடை தயாரிப்பு

கள்ளக்குறிச்சி : படித்த இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார் தொழில்திறன் பயிற்சி, கட்டுமானம் குழாய் பொருத்துனர் மற்றும் ஆடை தயாரிப்பு பயிற்சிகள் நடத்திட உரிய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பயிற்சி முடித்தமைக்கான முன் அனுபவம் குறித்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியான திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட அலுவலகம், நிறைமதி ஊராட்சி வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X