வ.உ.சி., பிறந்த நாள் விழா; மரக்கன்றுகள் நடவு: வரலாற்றை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., பிறந்த நாள் விழா; மரக்கன்றுகள் நடவு: வரலாற்றை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்

Added : செப் 06, 2021
Share
பொள்ளாச்சி, உடுமலையில், வ.உ.சி., பிறந்த நாள் விழாவையொட்டி மரக்கன்று நடவு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் சார்பில், வ.உ.சி.,யின், 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர், பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார்.அமைப்பின் பொறுப்பாளர்
 வ.உ.சி., பிறந்த நாள் விழா; மரக்கன்றுகள் நடவு: வரலாற்றை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்

பொள்ளாச்சி, உடுமலையில், வ.உ.சி., பிறந்த நாள் விழாவையொட்டி மரக்கன்று நடவு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் சார்பில், வ.உ.சி.,யின், 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர், பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார்.அமைப்பின் பொறுப்பாளர் ராமலிங்கம், ராமகிருஷ்ணன், கவிஞர் காளிமுத்து பங்கேற்றனர்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.பொள்ளாச்சி காந்தி நகர் குடியிருப்போர் நல சங்கம், என்.ஜி.எம்., கல்லுாரி மற்றும் சேவாலயம் அறக்கட்டளை சார்பில், காந்தி நகர் சிறுவர் பூங்கா பணி துவக்கம், ஆசிரியர் தினம், வ.உ.சி., பிறந்த நாள் விழா, சேவாலயம் அறக்கட்டளை, 32வது ஆண்டு துவக்க விழா நடந்தது.என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். சேவாலயம் தலைவர் மயில்சாமி முன்னிலை வகித்தார். காந்திநகர் குடியிருப்போர் நல சங்க செயயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.சிறுவர் பூங்காவில், மரக்கன்றுகள் நடப்பட்டு பூங்கா பணி துவங்கப்பட்டது. சேவாலயம் பட்டய தலைவர் மோகன்ராஜ், கல்லுாரி துறை தலைவர் ரவீந்திரன், பேராசிரியர் சீனிவாசன் பேசினர். செயலாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

சேவாலயம் பாரதி படிப்பகத்திலும் வ.உ.சி., பிறந்த நாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழாவையொட்டி, வ.உ.சி., டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பில், ஆசிரியர் தின விழா, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.ஆனைமலைஆனைமலை முக்கோணம் பகுதியில், வ.உ.சி., பேரவை, அனைத்து பிள்ளைமார் சமூகம் சார்பில், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பேரவையின் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். இதில், மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, வ.உ.சி., பிறந்தநாளை முன்னிட்டு, 14 அறிவிப்புகள் வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.உடுமலைஉடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வ.உ.சிதம்பரனார், பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரின் சுதந்திர போராட்ட வரலாறு நினைவுபடுத்தி விளக்கப்பட்டு, இனிப்பு வழங்கி, வீர வணக்கம் செலுத்தப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் ஒருங்கிணைந்த சட்டசபை தொகுதி அனைத்து பிள்ளைமார் சமூக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்- நிருபர் குழு -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X