பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தொற்று பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டமாக சேர்த்து
 விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தொற்று பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டமாக சேர்த்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்த அனுமதியில்லை.

கேரளா மாநிலத்தில் ஓனம், பக்ரித் பண்டிகை கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, தனிநபராக நீர்நிலைகளுக்குச் சென்று கரைக்கலாம். பூஜை பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என டி.எஸ்.பி., அறிவுறுத்தினார்.

இதற்கு, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி எதிர்ப்பு தெரிவித்து, பழைய அரசாணை படி பொது இடங்களில் 3 நபர்களுடன் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியே சென்றார்.சங்கராபுரம்சங்கராபுரத்தில் போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசுகையில், 'கொரோனா காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'என்றார்.கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட செயலாளர் செல்வகணபதி, துணைத் தலைவர் ரவி, ஒன்றிய தலைவர் செந்தில், அன்பழகன், பசுபதி, மூர்த்தி, பாஸ்கர், கண்ணன், சத்யா, இளங்கோ மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X