பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 16 பேருக்கு தொற்று

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மகாலிங்கபுரம், ஐ.சி.எஸ்., மில் ரோடு, சுந்தரம் லே - அவுட் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பாளையம், சூளேஸ்வரன்பட்டி, எஸ்.நல்லுார், நம்பியமுத்துார்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மகாலிங்கபுரம், ஐ.சி.எஸ்., மில் ரோடு, சுந்தரம் லே - அவுட் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பாளையம், சூளேஸ்வரன்பட்டி, எஸ்.நல்லுார், நம்பியமுத்துார், கூளநாயக்கன்பட்டியில் தலா ஒருவர் என, ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திப்பம்பட்டியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், ஒன்பது பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், நேற்று முன்தினம், ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று, சொலவம்பாளையம், நல்லட்டிபாளையம் கிராமங்களில் தலா, ஒருவருக்கு தொற்று பரவல் உறுதியானது. நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 73 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனைமலை தாலுகாவில், நேற்று முன்தினம், பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று, ஆனைமலை, காளியாபுரம் பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறை தாலுகாவில், முத்துமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 46 வயது பெண் தொழிலாளி ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை கேர்சென்டரில், மூன்று பேர் சிகிச்சையில் உள்ளனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியும், மாநில எல்லை பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X