பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் இருந்து பஸ்களில் வருவோருக்கு 'டெஸ்ட்' அவசியம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரளா எல்லையில் பஸ்களில் வருவோரையும் பரிசோதனை செய்ய வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.கேரள மாநிலத்தில், கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதையடுத்து, தமிழ - கேரள எல்லையான, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், கோபாலபுரம் சோதனைச்சாவடியில், கேரள பதிவு எண்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரளா எல்லையில் பஸ்களில் வருவோரையும் பரிசோதனை செய்ய வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.கேரள மாநிலத்தில், கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதையடுத்து, தமிழ - கேரள எல்லையான, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், கோபாலபுரம் சோதனைச்சாவடியில், கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி, 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.கோபாலபுரத்தில் தனி வாகனங்களில் வருவோரை நிறுத்தி சோதனை செய்த பின் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கேரள எல்லையில் இருந்து, பஸ்களில் வருவோரை பரிசோதனை செய்வதில்லை. இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பஸ்களில் வருவோரையும் பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையெனில் தொற்று குறையும் வரை, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X