போலீஸ் செய்திகள்: மாணவன் உடல் கிடைக்கல

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் போலீசாக பணி புரிந்து, விருப்ப ஒய்வு பெற்றவர். இவரது மகன் ஸ்ரீராம்,25. கோவை தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த மாதம், 30ம் தேதி வால்பாறைக்கு நண்பர்களுடன், சுற்றுலா வந்த போது, சோலையாறு அணை சேடல்டேம் பகுதியில் நீர்சூழலில் சிக்கி மாயமானார்.இந்நிலையில், சேடல்டேம் பகுதியில், சுற்றுலா பயணிகள்
 போலீஸ் செய்திகள்: மாணவன் உடல் கிடைக்கல

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் போலீசாக பணி புரிந்து, விருப்ப ஒய்வு பெற்றவர். இவரது மகன் ஸ்ரீராம்,25. கோவை தனியார் மருத்துவக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த மாதம், 30ம் தேதி வால்பாறைக்கு நண்பர்களுடன், சுற்றுலா வந்த போது, சோலையாறு அணை சேடல்டேம் பகுதியில் நீர்சூழலில் சிக்கி மாயமானார்.இந்நிலையில், சேடல்டேம் பகுதியில், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்து எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர்.

மாணவனின் தந்தை, 'காணாமல் போன எனது மகனில் உடலை, வால்பாறையிலிருந்து கேரள மாநில காட்டுப்பகுதியிலோ அல்லது கேரள பகுதியிலோ கண்டால் தெரியப்படுத்துங்கள்', என, வாட்ஸ்ஆப்பில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேபிள் ஆபரேட்டர் தற்கொலை

வால்பாறை, சோலையாறு டேம் இடதுகரை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்,50. இவர் கேபிள் ஆபரேட்டராக இருந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர், தினமும் குடிபோதையில் வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன் தினம் இரவு, போதையில் வந்தவரிடம், மனைவி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், மனமுடைந்த மோகன்ராஜ், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தங்கம்மாள் கொடுத்த புகாரில் பேரில், ேஷக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி விவசாயி பலி

கோவை, மதுக்கரை பிச்சனுாரை சேர்ந்தவர் வேலுசாமி, 37; விவசாயி. நேற்று மாலை, பைக்கில் பொள்ளாச்சி சென்று கொண்டிருந்தார். தாமரைக்குளம் அருகே சென்றபோது, மழையில் நனையாமல் இருக்க, மழை கோட்டு அணிவதற்காக, பைக்கை ரோட்டோரம் நிறுத்தினார்.அப்போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக, ரோட்டோரம் நின்றிருந்த பைக் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த வேலுசாமி, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.

விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., கணேசமூர்த்தி விசாரிக்கிறார்.சேவல் சண்டை: 6 பேர் கைதுஉடுமலை சப்-டிவிஷன், அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட, லிங்கமாவூர், கொங்குரார் குட்டை பகுதியில், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, டி.எஸ்.பி., தேன்மொழிவேலுக்கு, பொதுமக்கள் ரகசிய தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, தனிப்படை போலீசார், ராஜேந்திரன், மராஜ் கபூர், சையது ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, வேட்டைக்காரன்புதுாரைச்சேர்ந்த வீரமுத்து, 29, குறிச்சிக்கோட்டை கஞ்சிமலை, 31, ரங்கநாதன், 39, ஜல்லிபட்டியை சேர்ந்த செந்தில், தியாகராஜன், 52, இளவரசன், 35, ஆகியோரை கைது செய்தனர். வர்களிடருந்து, ஆறு சேவல்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய, ரூ. 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, அமராவதி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குட்கா பதுக்கல்; மூவர் கைது

உடுமலை, அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட, கல்லாபுரம், வேல்நகர் பஸ ஸ்டாப் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ,குட்கா பொருட்கள் 7 கிலோ பதுக்கி வைத்திருந்த, குமரலிங்கம், ஜீவா வீதியை சேர்ந்த செந்தில்குமார்,35, டி.எஸ்.பி., தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மடத்துக்குளம் பகுதியில், பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்கு, புகையிலை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் சோழமாதேவியைச்சேர்ந்த ஜாவித் அமால், 28 என்ற நபரையும், மடத்துக்குளம் பகுதியைச்சேர்ந்த தெய்வசிகாமணி, 52 என்ற நபரையும் கைது செய்ததோடு, 4,500 ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை இருப்பில் வைத்துக்கொண்டு, ரகசியமாக விற்பனை செய்து வந்தனர். இதை உறுதி செய்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X