குழந்தைகள் மருத்துவ முகாம்: 115 பேருக்கு சிறப்பு பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் மருத்துவ முகாம்: 115 பேருக்கு சிறப்பு பரிசோதனை

Added : செப் 06, 2021
Share
குன்னுார்:குன்னுார் வண்ணாரபேட்டை நகராட்சி பள்ளி மையத்தில்,கோத்தகிரி கே.எம்., மருத்துவமனை 'கைண்டர் டிரஸ்ட்' சார்பில், குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி துவக்கி வைத்தார். கைண்டர் டிரஸ்ட் அறங்காவலர்கள் டயானா பரூச்சா தலைமை வகித்தார்.இதில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் முன் எலும்பு நோய் கண்டறியல் உட்பட

குன்னுார்:குன்னுார் வண்ணாரபேட்டை நகராட்சி பள்ளி மையத்தில்,கோத்தகிரி கே.எம்., மருத்துவமனை 'கைண்டர் டிரஸ்ட்' சார்பில், குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி துவக்கி வைத்தார். கைண்டர் டிரஸ்ட் அறங்காவலர்கள் டயானா பரூச்சா தலைமை வகித்தார்.இதில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் முன் எலும்பு நோய் கண்டறியல் உட்பட பல்வேற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கே.எம்.எப்., டாக்டர் கோஷி ஜார்ஜ் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். மாற்று திறன் குழந்தைகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்ள டிரஸ்ட் முடிவு செய்தது.கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருந்த பெற்றோருக்கு,டாக்டர் பாரதி தலைமையில் தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X