பொது செய்தி

தமிழ்நாடு

'குடி' மையமாக மாறிய நடை மேம்பாலம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : குரோம்பேட்டையில், நடைமேம்பாலம்- அணுகு சாலையை ஒட்டி, 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. காலையிலேயே கூட்டம் கூட்டமாக வரும் குடிமகன்கள், மதுபானங்களை வாங்கி வந்து, நடை மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து அருந்துகின்றனர். அவர்களில் பலர், போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுவதும், சாலையில் படுத்து கிடப்பதும் பார்க்க முடிகிறது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் அணுகு சாலையில்,
 'குடி' மையமாக மாறிய நடை மேம்பாலம்

சென்னை : குரோம்பேட்டையில், நடைமேம்பாலம்- அணுகு சாலையை ஒட்டி, 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது.

காலையிலேயே கூட்டம் கூட்டமாக வரும் குடிமகன்கள், மதுபானங்களை வாங்கி வந்து, நடை மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து அருந்துகின்றனர். அவர்களில் பலர், போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுவதும், சாலையில் படுத்து கிடப்பதும் பார்க்க முடிகிறது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் அணுகு சாலையில், நாள்தோறும் குடிமகன்களின் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வதை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தடுப்பதே இல்லை. இது குறித்து, அரசுத்துறை அதிகாரிகளோ, போலீசாரோ கண்டுகொள்வதில்லை. தற்போது, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X