பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே புளியமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் பெய்த மழையில், ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே இருந்த சாலையோர புளியமரம் மாலை 4:30 மணியளவில் வேருடன் சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனம் ஏதும்
 சாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே புளியமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று மதியம் பெய்த மழையில், ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே இருந்த சாலையோர புளியமரம் மாலை 4:30 மணியளவில் வேருடன் சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனம் ஏதும் அவ்வழியே செல்லவில்லை.இதனால், கள்ளக்குறிச்சி - ஏமப்பேர் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதித்தது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X