பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை பராமரிக்க 4.08 கோடி

Added : செப் 06, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை, செப். 6-திருநீர்மலை ஏரியை பராமரிக்க 4.08 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, பொது பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான நிதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டி, திருநீர்மலை ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள
ஏரியை பராமரிக்க 4.08 கோடி

குரோம்பேட்டை, செப். 6-திருநீர்மலை ஏரியை பராமரிக்க 4.08 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, பொது பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான நிதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டி, திருநீர்மலை ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 194.01 ஏக்கர் பரப்பளவு கொண்டது.பல வகை ஆக்கிரமிப்புகளால், ஏரியின் பரப்பளவு சுருங்கியுள்ளது. மற்றொரு புறம், திருநீர்மலை பேரூராட்சி பகுதிகள் மற்றும் அருகேயுள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இதில் கலக்கிறது.பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து பச்சையாக மாறிவிட்டது.

இதனால், துர்நாற்றம் அதிகரித்து உள்ளதுடன், கொசு உற்பத்தியும் பெருகியுள்ளது.அதே போல், ஆகாய தாமரை படர்ந்து, ஏரி முழுவதும் புதர் போல் காட்சி அளிக்கிறது. கரை முழுதும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால், கரை இருப்பதே தெரியாமல் உள்ளது.கடந்த ஆண்டு, ஏரிக் கரையோரம் இருந்த, முட்புதர்கள் பொதுப் பணித்துறையால் அகற்றப்பட்டன. அதன்பின், கரைகள் முறையாக பராமரிக்கப்படாததால், மீண்டும் கருவேல மரங்கள் முளைத்து,

ஏரியின் கரை, காடு போல் காட்சியளிக்கிறது.தவிர, ஏரியின் மேற்கு கரை பகுதியில், நாளுக்கு நாள் புதிதாக, ஆக்கிரமிப்புகள் முளைத்து வருகின்றன.இந்த ஏரியின் கரைகள் மற்றும் கலங்கலை பலப்படுத்த, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஒட்டு மொத்தமாக, நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளின் கீழ், 4.08 கோடி ரூபாய் மதிப்பில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உட்பட இதர பணிகளை செய்யவும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி உள்ளதாக, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதற்கு, நிர்வாக அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கப்பட்டால், ஏரி புனரமைப்பு பணிகள், விரைவில் துவங்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.கருவேல மரங்கள் ஒழிக்கப்படுமா?சமீபத்தில்,'ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற, கொஞ்சம் கொஞ்சமாக நடவடிக்கை எடுக்கப்படும்; அதை, ஒரு திட்டமாக செய்ய உள்ளேன்,' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் அறிவித்தார்.அதன்படி, முதற்கட்டமாக சென்னை புறநகரில் உள்ள, நீர்நிலைகளில் முளைத்துள்ள, கருவேல மரங்களை அகற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர்ந்து, அத்திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X