பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

Added : செப் 06, 2021
Share
Advertisement
தேனி--தேனி மாவட்டத்தில் 9 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள், சான்றிதழ்கள், பரிசு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலைகள் கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் விருது வழங்கும் விழா கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஷ்குமார், ஜான்சன், கணேசன்,

தேனி--தேனி மாவட்டத்தில் 9 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள், சான்றிதழ்கள், பரிசு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலைகள் கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் விருது வழங்கும் விழா கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஷ்குமார், ஜான்சன், கணேசன், சித்ரா, தமிழ்செல்வி, பட்டதாரி ஆசிரியர்கள் சின்னராஜ், சுகந்தி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவராமச்சந்திரன், உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பிரபு உள்ளிட்ட 9 பேருக்கு விருது, பரிசு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கினார். ஆண்டிபட்டி சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், தனக்கு பரிசாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக கலெக்டரிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X