கணவர் உடலை வாங்க மறுத்து கலெக்டரிடம் பெண் மனு

Added : செப் 06, 2021 | |
Advertisement
தேனி -கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் 32. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் உறுப்பினர். இவர் கம்பம் மின்வாரிய ரோட்டில் கொடிக் கம்பம் வைத்தார். பின் அக்கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். கொடி கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கொடி ஏற்ற வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார். போலீசார்

தேனி -கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் 32. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் உறுப்பினர். இவர் கம்பம் மின்வாரிய ரோட்டில் கொடிக் கம்பம் வைத்தார். பின் அக்கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். கொடி கம்பத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கொடி ஏற்ற வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார். போலீசார் பேச்சுவார்த்தையில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிதியில் புதிய கம்பம் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலம்பரசன் ஆக., 31ல் கொடிக் கம்பத்தின் அருகில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சிகிச்சையில் இருந்தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டப் பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, இறந்த சிலம்பரசனின் மனைவி ராஜேஸ்வரி உடன் கலெக்டர் முரளீதரன், இழப்பீடு வழங்கவும், அரசுப் பணி வழங்க மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X