தேனி--தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில், தேனி ரயில்வே கேட் அருகே வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர் சதீஸ்குமார் தலைமை வகித்து வ.உ.சி., படத்திற்கு மாலை அணிவித்தார். அனைத்திந்திய செட்டியார் பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், ஹிந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மரியாதை செய்தனர். நகர இளைஞரணித் தலைவர் மகேஸ்பாண்டி நன்றி கூறினார்.பெரியகுளத்தில் தேனி வடக்கு மாவட்டம் ஹிந்து முன்னணி நகரத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்டச் செயலாளர் உமையராஜன், வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தனர்.* தேனி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்டச் செயலாளர் ஐயப்பன் வ.உ.சி., படத்திற்கு மாலை அணிவித்தார். ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் அன்புசுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் செல்லப்பா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் ஆதிலிங்க பாண்டியன், மகளிரணி நகரச் செயலாளர் அமிர்தவல்லி பங்கேற்றனர்.பா.ஜ. மரியாதை* பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வ.உ.சி., சிலைக்கு பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.* தேவதானப்பட்டியில் வ.உ.சி., சிலைக்கு தி.மு.க., வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன் மாலை அணிவித்தார். பெரியகுளம் ஒன்றிய தலைவர் தங்கவேல், மாவட்ட பொறுப்பாளர் அருணாசேகர், நகர பொறுப்பாளர் முரளி பங்கேற்றனர். வடுகபட்டியில் வ.உ.சி., படத்திற்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் மாவட்ட செயலாளர் ஐயப்பன் மாலை அணிவித்தார்.* கம்பத்தில் நடந்த வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் வேலப்பர் வேளாளர்சங்க தலைவர் காந்தவாசன் தலைமை வகித்தார். மத்திய சங்க தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். வ.உ.சி. சிலைகளுக்கு வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.* சின்னமனுாரில் வ.உ.சி. சிலைக்கு மத்திய சங்க தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் குருக்கள் சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் பாரி, இளைஞர் அணிதலைவர் காசி, நாட்டாமை முத்துமணி, குருக்கள் பள்ளி செயலாளர் பாண்டி மற்றும் அனைத்து அரசியல், மற்றும் சமுதாயங்களின் நிர்வாகிகள் பங்கேற்று சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது.* உத்தமபாளையம் சுங்கச்சாவடியிலிருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் நடத்தி, பொங்கல் வைத்தனர். பின்னர் புதிய சங்க கட்டடத்தில் வ.உ.சி. படம் திறந்து மரியாதை செய்தனர். வேளாளர் சங்க தலைவர் ரவி என்ற கார்த்திகேயன், செயலாளர் கண்ணன், பொருளாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE