சர்வர் சரி செய்ய போர்க்கால நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சர்வர்' சரி செய்ய போர்க்கால நடவடிக்கை

Added : செப் 06, 2021
Share
புதுச்சேரி : 'ஜிப்மரில் தொலை மருத்துவ சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது' என, அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஜிப்மர் மருத்துவமனையின் இணைய 'சர்வர்' ஹேக்கர்களால் நேற்று முன் தினம் முடக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இணையம் சார்ந்த அனைத்து மருத்துவப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வரை

புதுச்சேரி : 'ஜிப்மரில் தொலை மருத்துவ சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது' என, அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையின் இணைய 'சர்வர்' ஹேக்கர்களால் நேற்று முன் தினம் முடக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இணையம் சார்ந்த அனைத்து மருத்துவப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வரை சீரமைக்கும் பணியில் இரண்டாவது நாளாக நேற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். நோயாளிகள் பற்றிய தகவல்களும் 'பேக் அப்'பில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜிப்மரில் தொலை மருத்துவ சேவை இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கணினி அமைப்பு பாதிப்பிற்குள்ளாகி இருப்பதால், பல்வேறு துறைகளில் கணினி மூலம் நடக்கும் சேவைகள் பெருமளவு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனையின் தொலை மருத்துவ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொலை மருத்துவ சேவைக்காக வெளியிடப் பட்ட தொலைபேசி எண்கள் தற்காலிகமாக செயல்படாது. தொலை மருத்துவ சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X