பள்ளியில் திருட்டு நான்கு பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் திருட்டு நான்கு பேர் கைது

Added : செப் 06, 2021
Share
கண்ணகிநகர் : காரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மின்விசிறி, கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ஓ.எம்.ஆர்., கஜராஜன் பிரதான சாலையில், அரசு துவக்க பள்ளி உள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி, பள்ளியின் பூட்டை உடைத்து 18 மின் விசிறிகள், 4 கணினிகள், மாணவர் சேர்க்கை ஆவணங்கள், கேரம்போர்டு, வாலிபால் போன்றவை திருடப்பட்டன.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை

கண்ணகிநகர் : காரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மின்விசிறி, கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓ.எம்.ஆர்., கஜராஜன் பிரதான சாலையில், அரசு துவக்க பள்ளி உள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி, பள்ளியின் பூட்டை உடைத்து 18 மின் விசிறிகள், 4 கணினிகள், மாணவர் சேர்க்கை ஆவணங்கள், கேரம்போர்டு, வாலிபால் போன்றவை திருடப்பட்டன.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை லதா, கண்ணகிநகர் போலீசில் புகார் அளித்தார்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காரப்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார், 21, அறிவொளி, 19, உள்ளிட்ட நான்கு பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இரு தினங்களுக்கு முன், கண்ணகிநகர் அரசு மேல்நிலை பள்ளியில், இது போன்று மின்விசிறிகள், டியூப் லைட்கள் திருடப்பட்டன. இந்த சம்பவத்தில், நான்கு பேருக்கும் தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X