ரூ.76 ஆயிரம் பணம், பைக்குடன் தலைமறைவான வாலிபர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலியார்பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்த், புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினிய பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அரியாங்குப்பம் பாரதி நகரை சேர்ந்த பிரீமன்ராஜ், 24; கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.கடந்த மாதம் 7ம் தேதி, பிரீமன் ராஜிடம் ரூ.76 ஆயிரம் பணமும், தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து, மற்றொரு கடையில்

புதுச்சேரி : முதலியார்பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்த், புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினிய பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அரியாங்குப்பம் பாரதி நகரை சேர்ந்த பிரீமன்ராஜ், 24; கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

கடந்த மாதம் 7ம் தேதி, பிரீமன் ராஜிடம் ரூ.76 ஆயிரம் பணமும், தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து, மற்றொரு கடையில் ஆர்டர் கொடுத்து விட்டுவருமாறு கடை உரிமையாளர் ஆனந்த் கூறினார். ஆனால், பிரீமன்ராஜ், பணம் பைக்குடன் மாயமானார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து பிரீமன்ராஜை தேடி வந்தனர்.இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், பிரீமன்ராஜை நேற்று கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ரூ. 76 ஆயிரம் பணத்துடன் மாயமான பிரீமன்ராஜ், மதுபானம் குடித்து பணத்தை செலவழித்து உள்ளார்.

பின்பு, பண்ருட்டி முந்திரி தோப்பில் தங்கி வேலை செய்து வந்தது தெரிய வந்தது.புதுச்சேரிக்கு வந்தபோது, போலீசாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட பிரீமன்ராஜ், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X