பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: செப்படி வித்தையை சொல்லுங்கள்!

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும்' என அறிவித்துள்ளார். தமிழ் இனி வேகமாக வளரும் என்பதில் யாருக்கும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:



latest tamil news


தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும்' என அறிவித்துள்ளார். தமிழ் இனி வேகமாக வளரும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.ஐயா... பெயர் வைப்பதற்கு முன்னால் அந்த கட்டடங்கள் கட்ட பயன்படுத்தியது சிமென்டா அல்லது சாம்பலா என்பதை தயவு செய்து ஊர்ஜிதப்படுத்தி கொள்ளுங்கள்.

கட்டடங்களுக்கு அழகான பெயர் சூட்டுவதை விட பலமான அஸ்திவாரமும், கலப்படமில்லாத கலவையும் தான் மிகவும் அவசியம்.மறைந்த, காமெடி நடிகர் நாகேஷ் ஒரு படத்தில், 'நாய்க்கு பேரு வச்சாளே, சோறு வச்சாளா' என சொல்வார்; கட்டடங்கள் அந்த கதையாகி விடும்!தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்; அதற்கு உண்டான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில், யாருக்கும் இரண்டாவது கருத்து கிடையாது.

ஆனால் பெயர் மட்டும் போதுமா?தமிழ் பெயர்களை சூட்டினாலே தமிழ் வளர்ந்து விடும் என்ற ஆலோசனையை யார் சொன்னது என தெரியவில்லை.சங்க காலம் முதல் இன்று வரை பன்முகத்தோடு தமிழ் வளர்ந்து வருகிறது.அணிகலன்கள் பெயரால் ஐம்பெரும் காப்பியம் தந்தது தமிழ். உலக பொதுமறையான திருக்குறளை தந்தது தமிழ். ஆன்மிகம் வளர பக்தி இலக்கியம் கண்டது தமிழ்.அவ்வையாரும், கம்பனும், பாரதியும், பாரதிதாசனும் பாடி மகிழ்ந்தது தமிழ். கண்ணதாசன் முதல் சிற்பி, வைரமுத்து என சமகால கவிஞர் போற்றியதும் தமிழ்.


latest tamil news


இப்படி, இவர்கள் எல்லாம் வளர்க்காத தமிழையா, கட்டடத்திற்கு பெயர் சூட்டும் செயல் வளர்க்க போகிறது? நல்ல வேடிக்கை. ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டமிட்டு செயல்படுங்கள்.'கம்பன் கடலை கடை, பாரதி பால் நிலையம், இளங்கோ இனிப்பு பலகார கடை' என பெயர் சூட்டுவதால் மொழி எப்படி வளரும் என்ற செப்படி வித்தையை, அமைச்சர் பெருமகனார் விளக்க வேண்டும்.

'அன்னை தமிழில் அர்ச்சனை' என்றனர்; இப்போது, 'கட்டடங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம்' என்கின்றனர். ஒன்று புரிகிறது... தமிழ் வளர்கிறதோ இல்லையோ, மொழியை முன்னிறுத்தி செய்யும் அரசியலால், அவர்கள் வளர்கின்றனர்!

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06-செப்-202122:47:30 IST Report Abuse
Anantharaman Srinivasan திராவிடனுக்கு முதலில் பிழையில்லாமல் தழிழ் எழுத கற்றுக்கொடுங்கள். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று சொல்லாமலிருந்தால் போதும்.. தமிழ் தானே வளரும். அரசியல்வாதிகள் தேவையில்லை..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-202121:20:19 IST Report Abuse
Pugazh V //sundaram - tirunelveli,இந்தியா 06-செப்-2021 14:32:: தமிழ் தமிழ் என்று சொல்லை பாமர மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமே நடக்கிறது// ஏன் நீங்கள் சமஸ்கிருதம் சமஸ்கிருதம் என்றோ இந்தி இந்தி என்றோ தெலுங்கு தெலுங்கு என்றோ சொல்லி ஏமாறும் பாமரர்களைக் காப்பாற்றுங்களேன்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-202121:18:02 IST Report Abuse
Pugazh V sundaram - tirunelveli,இந்தியா ://தமிழ் தமிழ் என்று சொல்லை பாமர மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமே நடக்கிறது// எந்த பாமர மக்கள், தமிழ் தமிழ் என்று சொன்னால் ஏமாந்து போய் என்ன பண்ணிவிடுவார்கள்? திமுக விற்கு வாக்களித்து விடுவார்கள் என்கிறீர்களா? அப்படி யானால் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் இங்கிலீஷ்காரர்களா? அவர்களுக்கு தமிழ் தெரியாதா? அல்லது இங்கிலீஷ் தெரிந்த யாரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X