இது உங்கள் இடம்: செப்படி வித்தையை சொல்லுங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: செப்படி வித்தையை சொல்லுங்கள்!

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (46)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும்' என அறிவித்துள்ளார். தமிழ் இனி வேகமாக வளரும் என்பதில் யாருக்கும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:latest tamil news


தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும்' என அறிவித்துள்ளார். தமிழ் இனி வேகமாக வளரும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.ஐயா... பெயர் வைப்பதற்கு முன்னால் அந்த கட்டடங்கள் கட்ட பயன்படுத்தியது சிமென்டா அல்லது சாம்பலா என்பதை தயவு செய்து ஊர்ஜிதப்படுத்தி கொள்ளுங்கள்.

கட்டடங்களுக்கு அழகான பெயர் சூட்டுவதை விட பலமான அஸ்திவாரமும், கலப்படமில்லாத கலவையும் தான் மிகவும் அவசியம்.மறைந்த, காமெடி நடிகர் நாகேஷ் ஒரு படத்தில், 'நாய்க்கு பேரு வச்சாளே, சோறு வச்சாளா' என சொல்வார்; கட்டடங்கள் அந்த கதையாகி விடும்!தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்; அதற்கு உண்டான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில், யாருக்கும் இரண்டாவது கருத்து கிடையாது.

ஆனால் பெயர் மட்டும் போதுமா?தமிழ் பெயர்களை சூட்டினாலே தமிழ் வளர்ந்து விடும் என்ற ஆலோசனையை யார் சொன்னது என தெரியவில்லை.சங்க காலம் முதல் இன்று வரை பன்முகத்தோடு தமிழ் வளர்ந்து வருகிறது.அணிகலன்கள் பெயரால் ஐம்பெரும் காப்பியம் தந்தது தமிழ். உலக பொதுமறையான திருக்குறளை தந்தது தமிழ். ஆன்மிகம் வளர பக்தி இலக்கியம் கண்டது தமிழ்.அவ்வையாரும், கம்பனும், பாரதியும், பாரதிதாசனும் பாடி மகிழ்ந்தது தமிழ். கண்ணதாசன் முதல் சிற்பி, வைரமுத்து என சமகால கவிஞர் போற்றியதும் தமிழ்.


latest tamil news


இப்படி, இவர்கள் எல்லாம் வளர்க்காத தமிழையா, கட்டடத்திற்கு பெயர் சூட்டும் செயல் வளர்க்க போகிறது? நல்ல வேடிக்கை. ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டமிட்டு செயல்படுங்கள்.'கம்பன் கடலை கடை, பாரதி பால் நிலையம், இளங்கோ இனிப்பு பலகார கடை' என பெயர் சூட்டுவதால் மொழி எப்படி வளரும் என்ற செப்படி வித்தையை, அமைச்சர் பெருமகனார் விளக்க வேண்டும்.

'அன்னை தமிழில் அர்ச்சனை' என்றனர்; இப்போது, 'கட்டடங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம்' என்கின்றனர். ஒன்று புரிகிறது... தமிழ் வளர்கிறதோ இல்லையோ, மொழியை முன்னிறுத்தி செய்யும் அரசியலால், அவர்கள் வளர்கின்றனர்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X