அலங்கோலமாக காட்சியளிக்கும் சோமசுந்தரம் விளையாட்டு திடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலங்கோலமாக காட்சியளிக்கும் சோமசுந்தரம் விளையாட்டு திடல்

Added : செப் 06, 2021
Share
தி.நகர் : தி.நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு திடலை, மாநகராட்சி கண்டுகொள்ளாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அலங்கோலமான அதை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகரில், சோமசுந்தரம் விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான இளைஞர்கள், பல்வேறு விளையாட்டு பயற்சிகள் மேற்கொள்கின்றனர். மேலும் முதியோர்
 அலங்கோலமாக காட்சியளிக்கும் சோமசுந்தரம் விளையாட்டு திடல்

தி.நகர் : தி.நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு திடலை, மாநகராட்சி கண்டுகொள்ளாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

அலங்கோலமான அதை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகரில், சோமசுந்தரம் விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான இளைஞர்கள், பல்வேறு விளையாட்டு பயற்சிகள் மேற்கொள்கின்றனர். மேலும் முதியோர் உட்பட பலர் நடைப்பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.ஆனால் இந்த விளையாட்டு திடலின், நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்தும், போதிய பராமரிப்பு இன்றியும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால், திறந்தவெளி கழிப்பிடமாகவும், 'பார்' ஆகவும் உருமாறி வருகிறது.

சமீபத்தில் பெய்த மழையில், திடலில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது.மேலும், தேங்கிய தண்ணீரில் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்த விளையாட்டு திடலை, சர்வதேச தரத்திற்கு உருவாக்க மாநகராட்சி சார்பில், 2016ம் ஆண்டு திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை அடுத்தகட்ட எந்த நடவடிக்கையும் இல்லை.பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து, விளையாட்டு திடலை புனரமைக்க, மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X