103 பேருக்கு தொற்று: ஒருவர் பலி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

103 பேருக்கு தொற்று: ஒருவர் பலி

Added : செப் 06, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,920 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். அதை தொடர்ந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,920 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். அதை தொடர்ந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 374 ஆக உயர்ந்தது.காரைக்காலில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதனால் இறப்பு எண்ணிக்கை 1817 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 166 பேர், வீட்டு தனிமையில் 795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதித்தோர் 2.09 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.76 ஆக உள்ளது.மாநிலத்தில் இதுவரை இரண்டு தவணை தடுப்பூசி உட்பட, 8 லட்சத்து 36 ஆயிரத்து 259 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X