பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த மாம்பலம் கால்வாயால் அபாயம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : மாம்பலம் கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பருவமழையின் போது அடைப்பு ஏற்பட்டால் வெள்ள அபாயமும் நீடிக்கிறது.சென்னையில், கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் முக்கிய நீர்வழித்தடங்கள் ஆகும். இவற்றில் முக்கிய வடிகால்களுடன், 52 துணை கால்வாய்கள் இணைகின்றன. இதில், மாம்பலம் கால்வாயும் ஒன்று.இக்கால்வாய், 5.6 கி.மீ.,
 பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த மாம்பலம் கால்வாயால் அபாயம்

சென்னை : மாம்பலம் கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பருவமழையின் போது அடைப்பு ஏற்பட்டால் வெள்ள அபாயமும் நீடிக்கிறது.சென்னையில், கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் முக்கிய நீர்வழித்தடங்கள் ஆகும்.

இவற்றில் முக்கிய வடிகால்களுடன், 52 துணை கால்வாய்கள் இணைகின்றன. இதில், மாம்பலம் கால்வாயும் ஒன்று.இக்கால்வாய், 5.6 கி.மீ., நீளம் உடையது. இது, தி.நகரில், நந்தனம், வழியாக அடையாற்றுடன் இணைகிறது. தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இரு மாநகராட்சி மண்டலங்கள் வழியாக செல்லும் இக்கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நோய் தொற்று உருவாகும் சூழல் உள்ளதால், கால்வாயை ஒட்டி குடியிருப்போர் பீதியில் உள்ளனர். மேலும், நீரோட்டம் தடைபட்டு, மழைக்காலத்தில் அதை ஓட்டியுள்ள நகர்களில் வெள்ளம் புகும் அபாய நிலை உள்ளது.எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, சுகாதார பாதிப்பை தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X