பாத்திர கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டு தாக்குதல் 4 பேருக்கு வலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தியாகு முதலியார் வீதியில், பாத்திரக் கடைக்குள் புகுந்து, மாமூல் கேட்டு, உரிமையாளரை சரமாரி யாக தாக்கிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39. தியாகு முதலி யார் வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 2:30 மணிக்கு, இவரது கடைக்கு வந்த 4 வாலிபர்கள், கடையில் ஏற்கனவே வேலை செய்த பெண்ணின் பெயரை சொல்லி,

புதுச்சேரி : தியாகு முதலியார் வீதியில், பாத்திரக் கடைக்குள் புகுந்து, மாமூல் கேட்டு, உரிமையாளரை சரமாரி யாக தாக்கிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 39. தியாகு முதலி யார் வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 2:30 மணிக்கு, இவரது கடைக்கு வந்த 4 வாலிபர்கள், கடையில் ஏற்கனவே வேலை செய்த பெண்ணின் பெயரை சொல்லி, விபரம் கேட்டுள் ளனர்.

மேலும், மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.ராஜ்குமார் பதில் அளிப்பதற்குள், 4 வாலிபர்களும், சரமாரியாக கை மற்றும் பாத்திரங்களால் தாக்கினர். இதில், ராஜ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர்.அந்த கும்பல், 'நாங்கள் திரும்பி வரும்போது பணத்தை எடுத்து வைக்க வேண்டும்' என கூறிவிட்டு, சென்றது.

அதில் ஒரு இளைஞர், வெண்கல பாத்திரம் ஒன்றையும் திருடிச் சென்றார்.புகாரின்பேரில் பெரியக்கடை போலீசார் விசாரித்ததில், கடைக்குள் புகுந்து தாக்கியது கோவிந்தசாலையை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்துள்ளது. பாத்திரக் கடை உரிமையாளரை 4 வாலிபர்கள் தாக்குவது குறித்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X