பொது செய்தி

இந்தியா

வைத்தியம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் செயின் 'அபேஸ்'

Added : செப் 06, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே, வைத்தியம் செய்வதாக கூறி, மூதாட்டியிடம் 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் ஆலஞ்சாலை வீதியில் வசிப்பவர் பெருமாள், 73; இவரது மகன் அய்யனாரப்பன், 39, கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யனாரப்பன் இடது கை,

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே, வைத்தியம் செய்வதாக கூறி, மூதாட்டியிடம் 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் ஆலஞ்சாலை வீதியில் வசிப்பவர் பெருமாள், 73; இவரது மகன் அய்யனாரப்பன், 39, கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யனாரப்பன் இடது கை, கால் பக்கவாதத்தால் செயல் இழந்தது. இவரது அத்தை, கோரைக்கோணியை சேர்ந்த சுந்தராம்பாள், 77; உடனிருந்து கவனித்து வந்தார்.நேற்று காலை 8.15 மணியளவில் பெரியபாபுசமுத்திரம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தாங்கள் நாட்டு வைத்தியர்கள் என தெரிவித்தனர்.

பெருமாள் தனது மகன் அய்யனாரப்பனுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். வீட்டில் யார், யார் உள்ளனர் என்பதை நோட்டமிட்ட அவர்கள் மருந்து எடுத்து வருவதாக கூறி சென்றனர். மீண்டும் காலை 10.30 மணிக்கு வந்த இருவரும் அய்யனாரப்பனுக்கு கை, கால்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தனர்.

அப்போது வீட்டில் பெருமாள், மூதாட்டி சுந்தராம்பாள் ஆகியோர் மட்டும் இருந்தனர் பெருமாளை பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினர்.தனியாக இருந்த மூதாட்டி சுந்தராம்பாளிடம், உடல் வலி நீங்க எண்ணெய் தேய்ப்பதாக கூறி, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு அவசரமாக வெளியேறினர்.சற்று நேரம் கழித்து செயின் பறிபோனதை அறிந்து மூதாட்டி கதறி அழுதார்.புகாரின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வழக்குப் பதிந்து, செயின் பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X