பொது செய்தி

தமிழ்நாடு

அம்பத்துார் ஆர்.டி.ஓ.,வுடன் இணைக்க சுற்று வட்டார மக்கள் வேண்டுகோள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
அம்பத்துார் : ஓட்டுனர் உரிமம், புதிய பதிவு எண் பெறுவது உள்ளிட்ட, வாகனம் தொடர்பான பணிகள் வசதிக்காக, தங்களது பகுதிகளையும் அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் இணைக்க வேண்டுமென, சுற்று வட்டார மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை அம்பத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.பிரச்னைஇந்த அலுவலகம் அம்பத்துார்,

அம்பத்துார் : ஓட்டுனர் உரிமம், புதிய பதிவு எண் பெறுவது உள்ளிட்ட, வாகனம் தொடர்பான பணிகள் வசதிக்காக, தங்களது பகுதிகளையும் அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் இணைக்க வேண்டுமென, சுற்று வட்டார மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அம்பத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.பிரச்னைஇந்த அலுவலகம் அம்பத்துார், கொரட்டூர், பட்டரவாக்கம், பாடி, அம்பத்துார் எஸ்டேட், திருமுல்லைவாயல், முகப்பேர் உள்ளிட்ட 9 பகுதிகளில் வசிப்போர், தங்களது புதிய வாகனங்களுக்கு பதிவு எண் பெறுவது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, அதை புதுப்பிப்பது, சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொள்ள வசதியாக உள்ளது.ஆனால், அம்பத்துாரை ஒட்டி உள்ள திருவேற்காடு, அயப்பாக்கம், மதுரவாயல் பகுதிகளில் வசிப்போர், மேற்கண்ட பணிகளுக்காக பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், அம்பத்துார் அடுத்த சண்முகபுரம் பகுதியில் வசிப்போர், சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அவர்கள், தங்கள் பகுதியில் இருந்து 8 முதல் 10 கி.மீ., துாரம் பயணிக்கின்றனர். அப்போது காலதாமதம், போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர்.எதிர்பார்ப்புமேலும், மேற்கண்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதனால், அவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் உள்ளது.

இந்த பிரச்னைகளை தவிர்க்க திருவேற்காடு, அயப்பாக்கம், மதுரவாயல் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் வசிப்போர், அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்கள் பணியை செய்து கொள்ள வசதியாக, அம்பத்துார் அலுவலகத்துடன் தங்களது பகுதிகளையும் இணைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இதனால் அவர்கள், அம்பத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல 3 முதல் 5 கி.மீ., துாரம் பயணித்தால் போதும். பணிகளை விரைவாக முடித்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X