பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணுாரில் தொடர் மின்வெட்டு இரவில் துாக்கமின்றி மக்கள் அவதி

Added : செப் 06, 2021
Share
Advertisement
எண்ணுார் : எண்ணுாரில், தொடர் மின் தடை குறித்து புகார் தெரிவித்தால், அதிகாரிகள் அலட்சிய பதில் அளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை எண்ணுாரில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணிமுத்துநகர், காட்டுக்குப்பம், நேரு நகர், சின்னகுப்பம், பெரிய குப்பம் என, 30க்கும் மேற்பட்ட நகர்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள

எண்ணுார் : எண்ணுாரில், தொடர் மின் தடை குறித்து புகார் தெரிவித்தால், அதிகாரிகள் அலட்சிய பதில் அளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை எண்ணுாரில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணிமுத்துநகர், காட்டுக்குப்பம், நேரு நகர், சின்னகுப்பம், பெரிய குப்பம் என, 30க்கும் மேற்பட்ட நகர்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள வீடுகளுக்கு தரை, வான் வழியாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பல வீடுகளில் மின் தேவை அதிகரித்திருப்பதால், மின் பெட்டி மற்றும் மின்மாற்றிகள் தாக்குப்பிடிப்பதில்லை.ஏ.சி., பயன்பாடு அதிகரித்திருப்பதாலும், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எண்ணுார் சுற்று வட்டாரம் முழுதும் தொடர் மின்வெட்டு பிரச்னை உள்ளது.காலை நேர மின் தடையால், வேலை மற்றும் பள்ளி, கல்லுாரி செல்வோர் கடும் அவதியுறுகின்றனர். இரவில் ஏற்படும் மின் தடையால் புழுக்கம் ஏற்பட்டு குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் மொபைல் போனில் புகார் தெரிவித்தால், 'அடிக்கடி போன் வருகிறது; எத்தனை பேருக்கு பதில் சொல்வது; நான் வெளியே இருக்கிறேன்' எனக் கூறி, இணைப்பை துண்டித்து விடுவதாக மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.மின் வாரிய உயரதிகாரிகள் கவனித்து, தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X