பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி கைத்தறி ஆடைகளுக்கு மீண்டும் மவுசு நெசவாளர்கள் மகிழ்ச்சி

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரணி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பருத்தி ஆடைகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது ஆரணி பேரூராட்சி. பிரசித்தி பெற்ற, பவானி அம்மன் கோவில் அமைந்துள்ள, பெரியபாளையத்தில் இருந்து, 4 கி.மீட்டர் துாரத்தில், அமைந்துள்ளது. இங்கு
 ஆரணி கைத்தறி ஆடைகளுக்கு மீண்டும் மவுசு   நெசவாளர்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரணி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பருத்தி ஆடைகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்,ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது ஆரணி பேரூராட்சி. பிரசித்தி பெற்ற, பவானி அம்மன் கோவில் அமைந்துள்ள, பெரியபாளையத்தில் இருந்து, 4 கி.மீட்டர் துாரத்தில், அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பாரம்பரிய நெசவாளர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நெசவு தொழில் செய்து வருகின்றனர். இங்கு நெய்யப்படும் சேலைகள், சுடிதார்கள், பெண்களை கவரும் வகையில் உள்ளன. இவர்கள் உற்பத்தி செய்யும், ஆடைகள் அனைத்தும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், குஜராத், மஹாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பருத்தி ஆடைகள், 500 -1,500 ரூபாயில் கிடைக்கிறது.பருத்தி சேலை மட்டுமல்லாமல், ஆரணியில் தயாராகும், லுங்கிக்கு, ஆண்கள்மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. பட்டுக்கு பெயர் போனது, திருவண்ணாமலை - ஆரணி என்றால், பருத்தி ஆடைகளுக்கு, திருவள்ளூர் - ஆரணி என, கூறினால், மிகையாகாது.இது குறித்து, ஆரணி நெசவாளர்கள் தரப்பில் கூறியதாவது:ஆரணியில், நெசவு தொழிலை நம்பி, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்த நிலையில், கால போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக, வாழ்வாதாரத்திற்காக நெசவாளர்கள் பலரும் வேறு வேலைக்கு செல்லத் துவங்கினர்.

இதன் காரணமாக, தற்போது, 200 குடும்பங்களே, நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா பெருந்தொற்று காலத்தில், இத்தொழில் நலிவடைந்த நிலையில், தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும், புத்துயிர் பெற்றுள்ளது. நெசவு ஆடைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதால், புத்துணர்ச்சியுடன் மீண்டும் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். பாரம்பரிய நெசவு தொழில், நலிவடையாமல் இருக்க, தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். இங்கு உற்பத்தியாகும், பருத்தி ஆடைகளை சந்தைப்படுத்தும் வகையில், அரசு சார்பில், இடம் வழங்க வேண்டும். பொங்கல் விழாவின் போது, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும், சேலைகளை, எங்களிடம் கொள்முதல் செய்தால், எங்களின் வாழ்க்கை தரமும் உயரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேரடி விற்பனை திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் வித விதமான, காட்டன் சேலைகள், தயார் செய்யப்படுகின்றன. விசைத்தறி மற்றும் கைத்தறி மூலம், அனைத்து விதமான, காட்டன் மற்றும் பாலி காட்டன் சேலைகளை, உற்பத்தி செய்து வருகிறோம். நாங்களே உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால், 500 முதல் 1,500 ரூபாய் வரை, குறைந்த விலையில் கிடைக்கிறது. பொதுமக்கள், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால், இந்த தொழிலை நம்பி உள்ள, நெசவாளர் குடும்பங்கள் பிழைக்கும்.பி.ரவிகுமார்,கைத்தறி ஆடை உற்பத்தியாளர், ஆரணி.அரசு அறிவிப்பால் நம்பிக்கை நெசவாளர்கள், ஆடை பின்னியதும், சேலையில் அழகை மெருகூட்ட, கண்ணாடி சருகு வைத்தல், 'எம்ப்ராய்டரி' போன்ற பணியை செய்து வருகிறேன்.

இதன் மூலம், 600 ரூபாய் கூலியாக கிடைக்கும். 'ஓவர் டைம்' பார்த்தால், கூடுதலாக, 200 ரூபாய் கிடைக்கும். மத்திய - மாநில அரசு அலுவலகங்களில், பணிபுரிவோர், வாரம் இரண்டு நாள், கைத்தறி ஆடை அணிய வேண்டும் என்ற அறிவிப்பால், எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும் என நம்புகிறோம்.ஜே.சுசிலா, தொழிலாளி, ஆரணி.குடும்பமே உழைக்கிறோம்பரம்பரை, பரம்பரையாக நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு பாவுக்கு, ஐந்து புடவைகள் நெய்ய முடியும். ஒரு வாரத்தில், மூன்று புடவை தான் நெய்யலாம். இதற்கு கூலியாக, 1,500 ரூபாய் கிடைக்கும். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் அனைவரும், குடும்பமாக இணைந்து, உழைத்தால் தான், புடவைகள் தயாராகும். இதில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து தான், ஆடைகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களைப் போன்ற கைத்தறி தொழிலாளர்களை, அனைவரும் ஊக்குவித்து, கைத்தறி ஆடைகளை வாங்கினால் தான், எங்களால் வளர முடியும்.எச்.திலீப்குமார், நெசவாளர், ஆரணி.வேலை வாய்ப்புநெசவு சார்ந்த பணிகளில் ஒன்று தான், புடவை மடித்தல். ஒரு புடவை மடித்தால், இரண்டு ரூபாய் கிடைக்கும். நாளொன்றுக்கு, 200 புடவை மடித்தால், 400 ரூபாய் கிடைக்கிறது. நெசவு தொழிலை நம்பி, எங்களைப் போல், 50க்கும் மேற்பட்டோர் இருக்கிறோம். தொடர்ந்து, நெசவு பணி நடந்தால் தான், எங்களைப் போன்றோருக்கும், வேலை வாய்ப்பு நிரந்தமாக இருக்கும்.ஜி.ஹேமா, தொழிலாளி, ஆரணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X