சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் தெரு நாய்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, 2 நாய்களை நரிக்குறவர் தனது
 தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தெரு நாய்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது

செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, 2 நாய்களை நரிக்குறவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாகனத்தில் கொண்டு சென்றது தெரிய வந்தது.தகவலறிந்த வி.மருதுார், வி.ஏ.ஓ., உமாபதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி., பழனிச்சாமி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி, இருவரைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், சாலாமேடு ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ், 51, தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருவதும், இந்த கோழிகளை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்ததால், ஆசாகுளத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ராஜ்குமார், 35, என்பவரை அழைத்து வந்து, நாட்டுத் துப்பாக்கியால் 2 தெரு நாய்களை சுட்டுக் கொன்று அப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், இருவரையும் ஆயுத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ்குமாரின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய எஸ்.பி., ஸ்ரீநாதா மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இறந்த நாய்களை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X