பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 18 இடங்களில் சி.எம்.டி.ஏ., கருத்து கேட்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை பெருநகரில், 18 இடங்களில் நில வகைபாடு மாற்றம் தொடர்பாக, பொது மக்களின் கருத்து கேட்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.சென்னை பெருநகரில் இரண்டாவது முழுமை திட்டப்படி, நிலங்களுக்கான வகைபாடு வரையறுக்கப்பட்டுள்ளது.இதில், பல இடங்களில் பிழைகள் இருப்பதால், புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.மேலும், சில இடங்களில், நடைமுறையில் இருக்கும் நில

சென்னை : சென்னை பெருநகரில், 18 இடங்களில் நில வகைபாடு மாற்றம் தொடர்பாக, பொது மக்களின் கருத்து கேட்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.

சென்னை பெருநகரில் இரண்டாவது முழுமை திட்டப்படி, நிலங்களுக்கான வகைபாடு வரையறுக்கப்பட்டுள்ளது.இதில், பல இடங்களில் பிழைகள் இருப்பதால், புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.மேலும், சில இடங்களில், நடைமுறையில் இருக்கும் நில வகைபாட்டுக்கு மாறான கட்டுமான திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதனால், நில உரிமையாளர்கள் வகைபாடு மறுவரையறைக்கு விண்ணப்பிக்கின்றனர்.

இவ்வகையில், சென்னை பெருநகரில், தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி, வண்டலுார், குன்றத்துார், திருவொற்றியூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட, 18 நிலங்களின் பயன்பாடு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. இதில், 11 நிலங்கள் விவசாய பயன்பாட்டில் இருந்து வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட உள்ளது.இது குறித்து, பொது மக்களின் கருத்துகளை கேட்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலங்கள் மாற்றம் தொடர்பாக ஆட்சேபம் இருப்பின், அது குறித்து, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X