சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது கல்வீச்சு: மர்ம நபருக்கு வலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் அரசு பஸ் மீது கல்வீசிய பயணியை போலீசார் தேடி வருகின்றனர். கடலுாரில் இருந்து விருத்தாசலத்திற்கு டி.என். 32. என் 3619 என்ற எண்ணுள்ள அரசு பஸ் நேற்று பகல் 12:00 மணியளவில் மந்தாரக்குப்பம் வழியாக சென்றது. மந்தாரக்குப்பம் அடுத்த மேட்டுக்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் இரு டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் அரசு பஸ் மீது கல்வீசிய பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுாரில் இருந்து விருத்தாசலத்திற்கு டி.என். 32. என் 3619 என்ற எண்ணுள்ள அரசு பஸ் நேற்று பகல் 12:00 மணியளவில் மந்தாரக்குப்பம் வழியாக சென்றது. மந்தாரக்குப்பம் அடுத்த மேட்டுக்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் இரு டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். இதற்காக பஸ் மெதுவாக சென்றதால் கடலுாரில் இருந்து நெய்வேலிக்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

பின், மந்தாரக்குப்பம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் பஸ்சிலிருந்து கீழே இறங்கி கல்லை எடுத்து பஸ் கண்ணாடி மீது வீசி விட்டு தப்பி ஒடி விட்டார். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் பின்பக்கம் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X