பழவேற்காடில் தடையை மீறி ஜோராக நடக்குது படகு சவாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழவேற்காடில் தடையை மீறி ஜோராக நடக்குது படகு சவாரி

Added : செப் 06, 2021
Share
பழவேற்காடு : பழவேற்காடில் தடையை மீறி நடக்கும் படகு சவாரியை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பழவேற்காடு ஏரியில், 2011ம் ஆண்டு நடந்த படகு விபத்தில், 22 பேர் இறந்ததை தொடர்ந்து, படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி அவ்வப்போது படகு சவாரி நடப்பதால், விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள், முகத்துவாரம் பகுதிக்கு சென்று
 பழவேற்காடில் தடையை மீறி  ஜோராக நடக்குது படகு சவாரி

பழவேற்காடு : பழவேற்காடில் தடையை மீறி நடக்கும் படகு சவாரியை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழவேற்காடு ஏரியில், 2011ம் ஆண்டு நடந்த படகு விபத்தில், 22 பேர் இறந்ததை தொடர்ந்து, படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி அவ்வப்போது படகு சவாரி நடப்பதால், விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள், முகத்துவாரம் பகுதிக்கு சென்று 'ஜாலி'யாக குளித்து விளையாடும் போது உயிர் பலி ஏற்படுகிறது.தடைக்கு பின்னரும் நடந்த பாதுகாப்பற்ற படகு சவாரியால், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

கடைசியாக கடந்த மாதம் 13ம் தேதி, சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த லலித்குமார், 17, என்பவர், நண்பர்களுடன் படகு சவாரி சென்று, முகத்துவாரம் அருகே ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இப்படி, விடுமுறை நாட்களில் தடையை மீறி படகு சவாரியும், அதனால் உயிரிழப்புகளும் தொடர்கிறது. இதை தவிர்க்க காவல் துறை கண்காணிப்பில் ஈடுபடுவதோடு, எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:விடுமுறை நாட்களில் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.

போலீசார் பற்றாக்குறை இருப்பதால், பொதுமக்கள் ஏரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் முகத்துவாரம் செல்வதை கண்காணிக்க முடியவில்லை.படகு சவாரிக்கு செல்லும் படகோட்டிகள் கண்டறிந்து, அவர்களை எச்சரித்துள்ளோம். அதை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், படகுகளும் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X