சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை உளுந்தூர்பேட்டை அருகே கணவர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், குழமூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலதி, 35; இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளைப்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், குழமூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலதி, 35; இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வந்த மாலதி, கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்மனந்தலில் வசித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, டீ கடையில் வேலை செய்யும் வேலு, 48; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. வேலு ஏற்கனவே திருமணமானவர். குழந்தை இல்லை.இதனை அறிந்த பச்சமுத்து நேற்று, குழமூரில் இருந்து செம்மனந்தல் வந்தவர், மாலை 6:30 மணியளவில், கெடிலம் தேசிய நெடுஞ்சாலை, ஆஞ்சநேயர் கோவில் அருகே, வேலுவிடம், தனது மனைவியுடன் வைத்துள்ள கள்ளத் தொடர்பை விட்டு விடும்படி கூறியுள்ளார்.

இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பச்சமுத்து, அங்கே கிடந்த விறகு கட்டையால், வேலுவை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து பச்சமுத்துவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X