பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து

Added : செப் 06, 2021
Share
Advertisement
சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை 11:00 மணி மற்றும் 11:45 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை 10:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், வரும், 12 மற்றும் 19ம் தேதிகளில் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளனசென்னை

சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை 11:00 மணி மற்றும் 11:45 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை 10:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், வரும், 12 மற்றும் 19ம் தேதிகளில் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளன
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 11:15 மணி 12:00 மணி, மதியம் 1:00 மணி மற்றும் 1:20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும், 12 மற்றும் 19ம் தேதிகளில், கடற்கரை - எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளனகடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை 11:30 மணி, நண்பகல் 12:20 மணி 12:40 மணி மதியம் 1:40 மணி மற்றும் 2:30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், 12 மற்றும் 19ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டு உள்ளன
திருமால்பூரில் இருந்து, காலை 10:40 மணி, காஞ்சிபுரத்தில் இருந்து, காலை 8:45 மணி, செங்கல்பட்டில் இருந்து, காலை 10:15 மணி, காலை 11:00 மணி, நண்பகல் 12:25 மணிக்கும்; தாம்பரத்தில் இருந்து காலை 10:20 மணி 11:30 மணி, நண்பகல் 12:10 மணி 12:30 மணி மற்றும் மதியம் 1:50 மணிக்கும் கடற்கரை நிலையத்துக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும், 12 மற்றும் 19ம் தேதிகளில், எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X