சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை மிரட்டியவர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்த குமார் (எ) பொம்மை குமார், 51; சிலை செய்து வருகிறார். அப்பகுதியில் ரோந்து சென்ற திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், விநாயகர் சிலை செய்ய அரசு தடை விதித்துள்ளதாக குமாரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்,

கடலுார் : கடலுார் அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்த குமார் (எ) பொம்மை குமார், 51; சிலை செய்து வருகிறார்.

அப்பகுதியில் ரோந்து சென்ற திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், விநாயகர் சிலை செய்ய அரசு தடை விதித்துள்ளதாக குமாரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போலீசாரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X