செவிலியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Added : செப் 06, 2021
Share
Advertisement
வானுார் : ஆரோவில் அருகே, செவிலியர் வீட்டின் பூட்டை உடைத்து, 6 சவரன் நகை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 40; இவரது மனைவி ஷகிலா, 38. ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பணியின் காரணமாக கோரிமேடு அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், ஆரோவில், கலைவாணர் நகரில் வசித்து வருகிறார். கணவர் மற்றும்

வானுார் : ஆரோவில் அருகே, செவிலியர் வீட்டின் பூட்டை உடைத்து, 6 சவரன் நகை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 40; இவரது மனைவி ஷகிலா, 38. ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பணியின் காரணமாக கோரிமேடு அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், ஆரோவில், கலைவாணர் நகரில் வசித்து வருகிறார். கணவர் மற்றும் மகன் சென்னையில் வசித்து வருகின்றனர்.

ஷகிலா, நேற்று முன்தினம் இரவு பணிக்காக வீட்டை பூட்டிச் சென்றவர், நேற்று காலை 8:30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் 5,000 ரூபாய், 3 ஏ.டி.எம்., கார்டுகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X