அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசு மீது பழிபோடக் கூடாது';விநாயகர் சதுர்த்திக்கு அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்: "தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்" என, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. மத விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், இங்கு

ஒட்டன்சத்திரம்: "தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்" என, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.



latest tamil news



ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. மத விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பதாகக் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவதை கண்டிக்கிறோம்.நாடு முழுவதும் எல்லா மத விழாக்களையும் தொற்று பரவாமல் கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை.

மத்திய அரசு சொன்னபடி நீட், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்களா.கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து உள்ளனர். அது போல் இங்கும் அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக், பூங்காக்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.


latest tamil news


விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கொரோனா பரவும் என்பது எந்த வகை நியாயம்.விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விழாக்களை சுமூகமாக நடத்த வேண்டும்.மாறாக இவ்விழாவுக்கு தடை விதித்தால் அதனை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்ற ஈ.வெ.ரா.,வுக்கு சிலை வைப்பதை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
06-செப்-202122:12:49 IST Report Abuse
nizamudin விநாயகரை வினை தீர்ப்பவரே
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
06-செப்-202122:10:13 IST Report Abuse
nizamudin மத்திய அரசிடம் அனுமதி பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி பெற முயற்சி செய்யவும்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-செப்-202118:46:34 IST Report Abuse
VENKATASUBRAMANIAN . நம்பிக்கை உள்ளவர்கள் கேட்கிறார்கள். உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் எதற்கு தலையிடுகிறோய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X