ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும்விழா| Dinamalar

தமிழ்நாடு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும்விழா

Added : செப் 06, 2021
Share
கடலுார் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு, இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மரக்கன்று நட்டு, இலவச மரக்கன்றுகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து 1000 மரக்கன்றுகளை கடலுார் நகராட்சி பள்ளி, கூத்தபாக்கம் புனித வளனார் மெட்ரிக் பள்ளி, கிட்ஸ் பள்ளி,
 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும்விழா

கடலுார் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு, இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மரக்கன்று நட்டு, இலவச மரக்கன்றுகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து 1000 மரக்கன்றுகளை கடலுார் நகராட்சி பள்ளி, கூத்தபாக்கம் புனித வளனார் மெட்ரிக் பள்ளி, கிட்ஸ் பள்ளி, வாண்டையாம்பள்ளம் ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளி, ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றியம் பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், கடலுார் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, இளந்தளிர் அமைப்பினர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X