கிரைம் செய்திகள்

Added : செப் 06, 2021
Share
Advertisement
ஹான்ஸ் விற்றவர் கைதுகுள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் நேற்று கடைத்தெருவில் கடைகளில் சோதனை செய்தனர். அரசுப்பள்ளி அருகே அங்காளம்மன் கோவில் தெருவில் கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ராஜி, 50; என்பவரை கைது செய்து, போதை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது பெண்ணாடம்: பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர்

ஹான்ஸ் விற்றவர் கைது

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் நேற்று கடைத்தெருவில் கடைகளில் சோதனை செய்தனர். அரசுப்பள்ளி அருகே அங்காளம்மன் கோவில் தெருவில் கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ராஜி, 50; என்பவரை கைது செய்து, போதை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது

பெண்ணாடம்: பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். பெண்ணாடம் மேற்கு ரத வீதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற அக்ரகார தெரு மணிகண்டன், 50; சோழன்நகர் உலகநாதன், 45, ஆகியோரை கைது செய்து, ரூ 50 மதிப்புடைய தலா 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஆற்றுமணல் கடத்திய இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பைக்கில் ஆற்று மணல் கடத்திய அதே பகுதி கோபி கிருஷ்ணன், 29; எருமனுாரைச் சேர்ந்த ராஜா, 20 ஆகியோரை கைது செய்தனர்.போதை பொருட்கள் விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பங்களா தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பெட்டிக் கடையில் ஹான்ஸ் பாக்கெட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், 43; என்பவரை கைது செய்தனர். மது பாட்டில் விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பழமலைநாதர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது பாட்டில் விற்ற எம்.ஆர்.கே., நகரைச் சேர்ந்த ராஜேஷ், 40; என்பவரை கைது செய்து 6 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமன்துரை மற்றும் போலீசார், பெருவரப்பூரைச் சேர்ந்த ஜெயக்குமார், 50; என்பவரை கைது செய்து 5 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மாணவி மாயம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் மகேஸ்வரி, 19; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவரை காணவில்லை. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.பெண் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கலைவாணன்,30; இவரது மனைவி கல்பனா,23; இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. கணவன் மனைவி இடையே நேற்று தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கல்பனா காலை 9:00 மணிக்கு வீட்டின் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொணடார். கல்பனாவின் தந்தை முருகன்,49; கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கடலுார் ஆர்.டி.ஓ., மேல் விசாரணை நடத்துகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X