'விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்திருப்பது சரியல்ல' : மதுரை ஆதீனம்

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (83) | |
Advertisement
பரமக்குடி--''விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. ''விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும்,'' என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வ.உ.சி., உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், மதுரை ஆதீனம் மேலும்

பரமக்குடி--''விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. ''விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும்,'' என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்தார்.latest tamil news


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வ.உ.சி., உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், மதுரை ஆதீனம் மேலும் கூறியதாவது;வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு. இதே சூழலை மற்ற மதங்களிலும் செயல்படுத்துவாரா. ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன.அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு,


latest tamil news


மத்தியில் மோடி அரசு, இந்தியாவை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயல்பாட்டால் லடாக் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது; இல்லையென்றால் பராக் ஆகியிருக்கும். படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகின்றனரோ, இல்லையோ, 'டாஸ்மாக்' சென்று சரக்கு வாங்கு கின்றனர். இளைஞர்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் மற்றும் சினிமாவால் குழம்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
07-செப்-202107:17:50 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்படி தான் பண்ணும்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
06-செப்-202123:18:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி முதலிரண்டு அலைகளால் பல லட்சம் மக்கள் மடிந்த போது மக்களை வேண்டாம், பக்தர்களை கூட காப்பாற்ற திராணியில்லாத கடவுள்களுக்காக அதை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் கூவிக்கொண்டு வெளிக் கிளம்புவது வேடிக்கையான வாடிக்கை. அறிவியல் தான் மனிதனை "அம்மை" நோயில் இருந்து, "பிளேக்" நோயில் இருந்து, முன்ஜென்ம பாவம் என்றிருந்த இளம்பிள்ளை வாதத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.. எந்த மதக்கடவுளும் இல்லை.. மனிதனின் மூடநம்பிக்கை மற்றும் அறியாமை தான் தேவ அற்புதங்களின் செழிப்பான விளைநிலம் என்கிறது பகுத்தறிவு
Rate this:
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
06-செப்-202120:57:28 IST Report Abuse
Palanivelu Kandasamy வெள்ளையர்களை எதிர்த்து எதற்கு விநாயக சதுர்த்தி விழா? இந்த தமிழக சரித்திரத்தில் எப்போது இந்த மாபெரும் சிலைகளும் ஊர்வலங்களும் வந்தன? மராட்டியத்தில் கணபதி பப்பா மரியா என்றால் இங்கே எதற்கு ஊர்வலம்? நமக்கு வேண்டிய அளவுக்கு திருவிழாக்கள் இருக்கின்றன, அவற்றை கொண்டாடினால் போதாதா? முந்தைய ஆதினம் ஒருபக்கம் சாய்ந்திருந்தார், இவர் வேறு பக்கம் சாய்கிறார். முதலில் நேர்மையைக் கடைப்பிடிப்போம்.
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
06-செப்-202123:34:47 IST Report Abuse
vivek c maniமுதலில் சரித்திரம் புரிந்து பின் கமெண்ட் அடிக்கணும். வெள்ளையனையும் இதே இந்துமத எதிர்ப்பை காட்டினான். இந்திய மக்களை எதிர்த்து பல பிரிவினை வாதம் செய்து தங்கள் ஆட்சியை நிலை செய்ய முயன்றனர். அப்போது பல இடங்களிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் வெள்ளையன் எதிர்ப்பு பிள்ளையார் வழிபாட்டு முறை போது புத்துயிர் அளிக்கப்பட்டது. தமிழக சரித்திரத்தில் அரசு எல்லா கோவில் விஷயங்களிலும் தலையீடு, ஹிந்து அல்லாதவர்களை கோவிலில் பணி செய்ய வைப்பது எப்போது வந்தன என்று கேட்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்த விதண்டாவாத தலையீடு கடந்த ஒரு சில ஆண்டுகளில்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X