சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உலகின் பெரிய காற்றாலை!

Added : செப் 06, 2021
Share
Advertisement
காற்றாலை தயாரிப்பில் தற்போது சீனா முன்னணிக்கு வந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜி.ஈ., நிறுவனம் தயாரித்த 'ஹாலியாடே - எக்ஸ்' என்ற ராட்சத காற்றாலையைவிட பெரியதை சீனா தயாரித்துள்ளது. 'மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜி' நிறுவனம் தயாரித்துள்ள காற்றாலையின் பெயர், 'மைசே' (MySE). ஒரு மைசே காற்றாலை 16 'மெகாவாட்' மின்சாரத்தை தயாரித்து 20ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் திறன் கொண்டது.இது
உலகின் பெரிய  காற்றாலை!

காற்றாலை தயாரிப்பில் தற்போது சீனா முன்னணிக்கு வந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜி.ஈ., நிறுவனம் தயாரித்த 'ஹாலியாடே - எக்ஸ்' என்ற ராட்சத காற்றாலையைவிட பெரியதை சீனா தயாரித்துள்ளது. 'மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜி' நிறுவனம் தயாரித்துள்ள காற்றாலையின் பெயர், 'மைசே' (MySE). ஒரு மைசே காற்றாலை 16 'மெகாவாட்' மின்சாரத்தை தயாரித்து 20ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் திறன் கொண்டது.

இது கடலில் மிதந்தபடி, கடற்காற்றில் மின்சாரம் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. அடிப்பகுதியில் இருந்து 242 மீட்டர் உயரம் எழுந்து நிற்கும் மைசே காற்றாலையின் ஆயுள் 25 ஆண்டுகள் நீடிக்கும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் 2022ல் ஒரு மைசே காற்றாலை வெள்ளோட்டத்திற்கு வரவுள்ளது. அது வெற்றி கண்டதும், அடுத்தடுத்த ஆண்டுகளில், பிரம்மாண்ட காற்றாலைகளை மிங்யாங் கடலில் மிதக்கவிடவுள்ளது.அப்படி மிதக்கும்போது, 118 மீட்டர் நீளமுள்ள மூன்று விசிறிகளும் சுழலும்போது, அவற்றின் பரப்பளவு மட்டும் ஆறு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பரந்து இருக்கும்.

சீன ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, கடலில் மிதக்கும் காற்றாலைகளின் அளவு பெரியதாக இருக்கும் பட்சத்தில், அவற்றில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு, படிப்படியாக குறையும் என்று தெரியவருகிறது. எனவேதான், கடல்பரப்பை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் கடல் மிதவைக் காற்றாலைத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X