சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நடமாடும் 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கருவி!

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஒரு அறையையே அடைக்குமளவுக்கு பெரியது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி. அதற்கு மாற்றாக, அண்மையில்தான், உலகின் முதல் நடமாடும் எம்.ஆர்.ஐ., இயந்திரம் அறிமுகமானது. வந்த கையோடு, இன்னொரு சவாலுக்கும் தீர்வை அக்கருவியால் வழங்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.மூளைத் தாக்குதல் ஏற்பட்ட நோயாளிகளில், சிலருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடும். அத்தகைய தேவை உள்ள நோயாளிகள் யார் என்பதை
 நடமாடும் 'எம்.ஆர்.ஐ.,  ஸ்கேன்' கருவி!

ஒரு அறையையே அடைக்குமளவுக்கு பெரியது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி. அதற்கு மாற்றாக, அண்மையில்தான், உலகின் முதல் நடமாடும் எம்.ஆர்.ஐ., இயந்திரம் அறிமுகமானது. வந்த கையோடு, இன்னொரு சவாலுக்கும் தீர்வை அக்கருவியால் வழங்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

மூளைத் தாக்குதல் ஏற்பட்ட நோயாளிகளில், சிலருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடும். அத்தகைய தேவை உள்ள நோயாளிகள் யார் என்பதை துல்லியமாக கண்டறிய நடமாடும் எம்.ஆர்.ஐ., இயந்திரத்தால் முடியும். இந்த உண்மை, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வழக்கமான எம்.ஆர்.ஐ., கருவியைவிட, ஹைப்பர்பைனின் நடமாடும் எம்.ஆர்.ஐ., கருவி 10 மடங்கு எடை குறைவானது. இதன் காந்தப் புலத்தின் ஆற்றல் மிகவும் குறைவு என்பதால், இது நுகரும் மின்சாரத்தின் அளவும் 35 மடங்கு குறைவு. தவிர, இதன் விலையும் பெரிய கருவியைவிட 20 மடங்கு கம்மி.

இத்தனை சிறப்புக் கொண்ட ஹைப்பர்பைனின் நடமாடும் எம்.ஆர்.ஐ., கருவியை, நோயாளியின் படுக்கைக்கு அருகிலேயே கொண்டு சென்று, ஸ்கேன் செய்ய முடியும். காந்த அளவு மிக குறைவு என்பதால், பாதுகாப்பானதும்கூட.

இக்கருவி மூலம், யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 144 பக்கவாத நோயாளிகளை சோதனை செய்தனர். அவர்களில், யாருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது, யாருக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை யேல் பல்கலைக்கழகத்தினரால் விரைவாகவும், 80 சதவீதம் துல்லியமாகவும் கண்டறிய முடிந்தது. இதனால், ஹைப்பர்பைனின் நடமாடும் ஸ்கேனரால், நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பல பயன்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthivel - trichy,இந்தியா
17-செப்-202112:39:24 IST Report Abuse
sakthivel நடமாடும் 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கருவியை தமிழ் நாடு அரசு வாங்கினால் மக்கள் பலன் பெறுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X